தனுசு ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, தேக ஆரோக்கியம் பெறும். எதிரிகள் விலகி செல்வர். பிரபலங்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். நீண்டநாளாக வரவேண்டிய பணம் கைவந்து சேரும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உடன் பிறப்புகளுடன் சிறு கருத்து வேறுபாடுகள் வந்து சரியாகும். அண்டை, அயலாரால் ஆதாயம் உண்டு. சொத்து தொடர்பான பிரச்னை வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. இஷ்டதெய்வ வழிபாடு அவசியம். எதிரிகளால் சிறு பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன் மனைவி இருவரும். ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எத்தனை தடை வந்தாலும், விடாமுயற்சியால் வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகள் பலிதமாகும். மனதில் ஒரு இனம் புரியாத சந்தோஷம் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் உடல் அலைச்சல் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். குடியிருக்கும் வீட்டை சீரமைக்க வேண்டிவரும். பூர்விக சொத்துக்களில் இருந்து வந்த சிக்கல் தீரும். குடும்பத்தில் சுப செலவுகள் அதிகம் இருக்கும். உறவினர்கள் வழியில் பண விரையம் ஏற்படும். புது வாகனம் வாங்கும் எண்ணம் வரும். வீடு, வாகனங்களுக்கான செலவு கூடும். மற்றவர்களுக்காக சில முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். சாட்சி கையெழுத்திட்டு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் அங்கீகாரம் கிடைக்கும். சிறிய முதலீட்டில் புது தொழில் ஒன்றை தொடங்க முடியும்.
சந்திராஷ்டமம் : 15,16,17,18 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com